Sunday, May 24, 2015

ஓசியில் கிடைத்தால் ...

ஓசியில் கிடைத்தால்
விஷத்தையும் குடிப்போமோ?

இல்லையே...

பின்னர் பாவத்திற்கு மட்டும்
ஏனுங்க விதிவிலக்கு?

அதுமட்டுமா...

காசுகொடுத்துமல்லவா நாசமாகிறோம்!


.

லஞ்சம் (பரிதானம்) பாவம் - ஏன்?

பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும் (நீதிமொழிகள் 17:8).


நாம் ஏன் லஞ்சம் வாங்கக் கூடாது?


1. தேவன் பரிதானம் வாங்குகிறவர் அல்ல

  •  உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல (உபாகமம் 10:17).

  • உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான் (II நாளாகமம் 19:7).


2. பரிதானம் வாங்காதிருப்பது தேவனுடைய கட்டளை


  •  பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். (யாத்திராகமம் 23:8)


3. பரிதானம் அநியாயம் செய்யும்


  • பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும் (உபாகமம் 16:19 ).

  • துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான் (நீதிமொழிகள் 17:23).

  • ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள் (I சாமுவேல் 8:3).

  • இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும் (பிரசங்கி 7:7).

  • பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா 5:23)

  • அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது (சங்கீதம் 26:10).



4. பரிதானம் வாங்கினால் ஆக்கினை வந்து சேரும்


  • மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும் (யோபு 15:34).


5. பரிதானம் தவிர்த்தால் ஆசீர்வாதம் வரும்


  • தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை (சங்கீதம் 15:5)

  • பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான் (நீதிமொழிகள் 15:27).


லஞ்சம் வாங்குவது பாவம் என்றால் லஞ்சம் கொடுப்பதும் பாவம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. 


.

யார் மதிகெட்டவன்?

1. தேவன் இல்லை என்பவன்  - தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் (சங்கீதம் 14:1).

2. விபசாரம் பண்ணுகிறவன் - ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன். ( நீதிமொழிகள் 6:32)

3. புறங் கூறுகிறவன் -  புறங்கூறுகிறவன் மதிகேடன். (நீதிமொழிகள் 10:18)

4. பிறனை அவமதிப்பவன் -  மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். (நீதிமொழிகள் 11:12)

5. முற்கோபக் காரன்  -  முற்கோபி மதிகேட்டைச் செய்வான். (நீதிமொழிகள் 14:17)

Thursday, May 14, 2015

பரலோக விசா

விரும்பும் ஒரு நாட்டினை
விசிட்செய்ய ஆசைப்பட்டு
விதிமுறைகளுக்கு உட்பட்டு
விசாவேண்டி விண்ணப்பித்தோம்

விண்ணப்பிக்க அறியாமல் 

விழிபிதுங்கி அங்குமிங்கும்
புரோக்கருக்கு அலையாமல்
அனைத்துமே ஆன்லைன்தான்

கப்சிப்பென கச்சிதமாய்

விண்ணப்பத்தை பூர்த்திசெய்தோம்
அப்படியே ஆன்லைனில்
அக்கறையாய் அனுப்பிவைத்தோம்

இண்டர்வியூவும் வந்தது

எதிர்பார்ப்பும் கூடியது
நடைமுறையெல்லாம் நடந்தது
நிராகரிப்பில் முடிந்தது

காரணமென்ன கூறவில்லை

தெரியும்வரை நகரவில்லை
தெரிந்துகொண்டோம் காரணத்தை
அதிகாரியின் விளக்கத்தை

உள்ளதை உள்ளபடி

கூறினாலும் குற்றமாம்
கொடுப்பதும் மறுப்பதும்
அதிகாரியின் முடிவுதானாம்

மீண்டும் இதை விண்ணப்பிக்க

வாய்ப்பு மட்டுமே உள்ளது
கிடைக்குமென்ற உத்தரவாதம்
அவருமே தருவதாயில்லை

என்செய்வோம் இப்போது,

ஏனிந்த புறக்கணிப்பு?
மீள்பார்வை செய்துகொண்டோம்
இயல்புக்கு மீண்டுவந்தோம்

மறுமுறை எப்படி நடக்கவேண்டும்

அனைவரின் கருத்தையும் ஏற்கவேண்டும்
நம்மையும் ஆயத்தப்படுத்த வேண்டும்
வாய்ப்பினை வரும்போது பறிக்கவேண்டும்

ஆசிக்கும் பரலோக நாட்டிற்கு

விசாவழங்கும் அதிகாரி
வந்துசேரும் வேளையிலே
தந்திடுவாரோ நம்கையில்?

விரும்பும் நாட்டினை விசிட்செய்ய

வாய்க்காத வாய்ப்புக்கே வருத்தமே
நிலையாய் வாழும் நாட்டிற்கு
வாய்ப்பு நழுவினால் என்செய்வாய்?

மறுத்தால் எதும் வாய்ப்புண்டா

மறுமுறையாகிலும் முடிந்திடுமா
ஒருமுறை தானே வருவாரே
உறுதிசெய்வீர் தவறாதே!

- with Diana Pethuru & Steve Hudson on 12.05.2015 @ US Embassy in Kuwait.

Wednesday, May 06, 2015

Religious Representatives

Medical students learn the theory of Modern medicine for 4.5 years. Then after 1 year of practical internship training, they come out as Doctors. This is like a half way through a well. So, again after trying for 1 or 2 years with entrance exam preparations, they get either into 2 years PG Diploma or 3 years MD/MS master degree and come out full-fledged doctors. Even then, in their own working environment as frequently visited by pharma companies' representatives, some fall in to the trap to conclude that whatever these people are telling is what the practice of modern medicine

Some representatives with very limited knowledge on medical field even try to teach us many times. This may be acceptable...but how can we wholeheartedly accept and prescribe the preparations of other medical systems just by listening to their words. Studying the modern medicine for years and prescribing something not related...the reasons for the plight of such doctors are, not updating their medicine periodically, listening only to the frequent sermons of drug company's representatives and falling in to their business strategy.

The condition of the present day Christian believers is also the similar. One time in the past there was Salvation experience; filling of the Holy Spirit; Prayer life; daily Bible reading and witnessing like that. In the course of their Christian life journey when their Bible reading came down, prayer life waned, but listening only to the teaching of the Preachers who lacks the vision and understanding on Universal Believers Fellowship, but may represent either the local or even global christian organisation. Subsequently the Believers have contracted themselves to Church Christians forgetting their past experiences and calling.

Whoever reads, let him understand.

.