Monday, July 21, 2008

பாலுற‌வு சோத‌னைக‌ளும் ப‌ரிகார‌ப் பதில்க‌ளும்

சோத‌னை 1: "'செக்ஸ்' ந‌‌ம்மை இன்னும் நெருக்க‌மாக்கும்"

ப‌தில்: இல்லை. செக்ஸ் ம‌ட்டுமே ந‌மது உற‌வின் மைய‌மாகி, வேறு எத‌ற்கும் அங்கே இட‌மிருக்காது.


சோத‌னை 2: "உன‌க்கு உண்மையாக‌வே என்மீது அன்பு இருந்தால், நிச்ச‌ய‌மாக‌ இத‌ற்கு ஒத்துக் கொள்வாய்"

ப‌தில்: நீ உண்மையாகவே என்னை நேசித்தால் இப்படி என்னிட‌ம் கேட்க‌வே மாட்டாய்; நீ என்னை ம‌திக்க‌வில்லையா?


சோத‌னை 3: "இந்த ஒரேயொரு தடவை மட்டும்..."

ப‌தில்: யாராலும் செக்ஸை ஒருமுறையோடு நிறுத்த‌ முடியாது. அது திரும்ப‌த் திரும்ப‌ வேண்டும் என்று ஏங்க‌ வைக்கும்.


சோத‌னை 4: " என் ஞாபகர்த்தமாக இதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன்"

ப‌தில்: ஓ, ஒருவேளை எயிட்ஸ்... அல்ல‌து குழ‌ந்தை...?


சோத‌னை 5: "நீ என்னோடு செக்ஸ் உறவு கொள்ளவில்லை என்றால், நான் வேறு யாரையாவது தேடிக் கொள்வேன்"

ப‌தில்: ந‌‌ல்லது. ந‌ம் இருவ‌ருக்கும் அமோக‌மான‌ வாழ்க்கை அமைய‌ என‌து ந‌ல்வாழ்த்துக்க‌ள்.


சோத‌னை 6: "எல்லோரும் தான் செய்கிறார்களே..."

ப‌தில்: இது உண்மையல்ல; எத்தனையோ பேர் இதனைத் தவிர்த்து, கற்போடு வாழ்கிறார்கள்.


சோத‌னை 7: "கவலையே வேண்டாம். நான் ஆணுறையை பயன்படுத்துகிறேன்; நல்ல பாதுகாப்பு உண்டு".

ப‌தில்: என‌க்கும் 100% பாதுகாப்பு த‌ரும் ஒன்று உண்டு. அது தான் 'வேண்ட‌வே வேண்டாம்' என்ப‌து.

நண்பனே,ஒருவேளை நீ ஏற்க‌ன‌வே செக்ஸ் உறவை அனுப‌வித்து விட்டாய். இன்னும் திரும‌ண‌மாக‌வில்லை. ம‌ன‌ம் உடைந்திருக்கிறாய். நீ கேவ‌ல‌மாக‌, அசுத்த‌மாக‌, க‌ள‌ங்க‌ப்ப‌ட்ட‌வனாக‌ உண‌ருகிறாய். என்ன‌ செய்வ‌தென்று அறியாம‌ல் திகைக்கிறாய்.

உன‌க்கு ஒரு ந‌ற்செய்தி. இன்றே நீ ஒரு புது வாழ்வை ஆர‌ம்பிக்க‌லாம். நீ செய்துவிட்ட‌து த‌வ‌றே என்ற‌ போதிலும் தேவ‌ன் இன்னும் உன்னை நேசிக்கிறார். நீ தேவ‌ன‌ண்டை வந்து, உன் பாவ‌த்தை அறிக்கையிட்டு, உண்மையாக‌வே நீ செய்த‌வ‌ற்றுக்காக‌ ம‌ன‌ம் வருந்துவாய் என்றால், அவ‌ர் உன்னை ம‌ன்னித்து, உன்னை விடுத‌லையாக்கி, உன‌க்கு வாழ்வ‌ளிப்பார். நீ உன்னை ஒரு புது ம‌னித‌னாக‌, ம‌னுஷியாக‌ உண‌ர‌ முடியும்.


இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. (2 கொரி 5:17).

Source: Ten Reasons Not To Have Sex Before Marriage (Tamil)