Saturday, May 10, 2008

வாழ்வதா சாவதா - எது கடினம்?

எனது இளங்கலை கல்லூரி நாட்களில் நான் விரும்பி பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட பொருளை எப்படியாவது என்னிடமிருந்து பறித்துக் கொள்ள வேண்டுமென்று முயற்சி செய்த எனது நெருங்கிய நண்பனின் முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தது. கடைசி முயற்சியாக அவன் என்னிடம் இப்படியாக கூறினான். " அவனவன் நண்பர்களுக்காக தன் உயிரையே கொடுக்குறான்க; நீ என்னவென்றால், இந்த சாதாரணமான பொருளையே எனக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே" உடனே நானும் இப்படியாக எனது பதிலை கூறினேன், " நீ வேண்டுமென்றால் எனது உயிரை வேன்டுமென்றாலும் எடுத்துக்கொள்; ஆனால் இந்தப்பொருளை விட்டுவிடு."


இதனைக் கேட்ட அவன் சிரித்துக் கொண்டே இடத்தைக் காலி செய்து விட்டான். ஆனால் இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் எனக்கு ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய கருத்து எனது எண்ணத்தில் வரும் அதனை உங்களுடன் பரிந்து கொள்ள‌ விரும்புகிறேன்.


எனது நண்பனுக்கு வேண்டிய்தெல்லம் நான் விரும்பி பயன் படுத்திக் கொண்டிருந்த‌ எனது பொருள் தான். எனது உயிரை கொண்டு அவன் ஒன்றும் செய்ய முடியாது. ஆனாலும் அன்பின் உச்சக் கட்ட வெளிப்பாடாகத் தான் அவன், உயிர்விடுதலைக் குறிப்பிட்டான். அவனை பொறுத்தவரை எனது உயிர் அல்ல; எனது பொருள் தான் முக்கியம்.


ந‌ம்மில் ப‌ல‌ர் ஆண்ட‌வ‌ருக்காக‌ இர‌த்த‌ சாட்சியாக‌வும் ம‌ரிக்க‌ த‌யார் என‌ மார்த‌ட்டிக் கொள்வதுண்டு. ஆனால் எத்த‌னை சூழ்னிலைக‌ளில் கிறிஸ்துவின் உண்மை சாட்சியாய் ந‌ம்மை வெளிப்படுத்திக் கொள்வ‌தில் த‌ய‌க்க‌தைக் காட்டியிருக்கின்றோம். நாமெல்லரும் இர‌த்த‌ சாட்சியாய் ம‌ரிக்க‌ வேண்டுமென்று ஆண்ட‌வ‌ர் ந‌ம்மை அழைக்க‌வில்லை; நாம் அவ‌ருக்காய் சாட்சியாய் வாழ‌வேண்டும் என‌வும் அத‌ற்கான பாதையில் ஒருவேளை ம‌ரிக்க‌வேண்டி வந்தாலும் அத‌ற்கும் த‌யாராக‌ இருக்க‌ வேண்டுமென்று தான் அவர் ந‌ம்மிட‌ம் எதிர்பார்க்கிறார்.


உள்ளூர்க் குட்டையில் மீன் பிடிக்காத‌வ‌ன் எப்ப‌டி வெளியூரில் ஆற்றில் மீனைப் பிடிக்க‌ முடியும்? என‌வே சாட்சி வாழ்க்கை வாழ‌ து(டி)ப்பில்லாத‌வ‌ர்க‌ளின் 'இர‌த்த‌ சாட்சி' வாசகங்க‌ளெல்லாம் வெறும் வெட்டிப் பேச்சுக்க‌ள்.


"வாழ்வ‌தே கிறிஸ்துவுக்காக‌; அத‌ற்காக‌ சாவ‌தும் மேலாதே" என்ற‌ ப‌விலின் வார்த‌தைக‌ளைப் போன்று நாமும் சாகும் வ‌ரையும் நல்ல‌ சாட்சியாய் வாழ‌ தீர்மானிப்போமா?