Friday, March 14, 2014

தனங்களில் கேவலமான தனம்

லெந்து கால சிந்தனை -2:

உலக வாழ்க்கையில் தனம் (செல்வம்) விரும்பாதோர் எவருமில்லை. பல்வேறு தனங்களையும் தங்கள் வசம் கொண்டிருப்போர் நம்மிடையே உண்டு.

 பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விருத்தசேதனம், வந்தனம், கீர்த்தனம், எத்தனம், துரைத்தனம், பிரயத்தனம், மரணசாதனம், பதனம், சந்தனம், பிரயத்தனம், பிசினித்தனம், மூடத்தனம், நூதனம், வேசித்தனம் இவைகளில் வேசித்தனம் என்பது ஒரு கேவலமான தனம் என்பதில் எந்த நூதனமும் இல்லை!

தானங்களில் சிறந்த தானம்

லெந்து கால சிந்தனை – 1


தானம் என்ற வார்த்தை பயன்பாட்டில் தாராளமாய் இருந்தாலும் அவற்றை தாராளமாய் செய்பவர் வெகுசிலரே. வெகுஜனமோ அவ்வப்போது அடுத்தவர் மத்தியில் நல்லெண்ணம் வரவே அவற்றில் ஏதாவது ஒன்றை செய்துவிடுன்றனர்.

மருத்துவத் துறையில் பல்வேறு தானங்கள் உள்ளன. அவைகளில் எது சிறந்தது என்றால் ஒவ்வொன்றுமே தேவையான ஒன்றுதான் அந்தந்த தேவையிலுள்ள நபருக்கு.

பரிசுத்த வேதாகமத்தில் கூட சந்தானம், சமாதானம், பரிதானம், ஸ்தானம், நிதானம், அன்னதானம், பிரதானம் என பல்வேறு தானங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இவற்றில் அனைவருடன் சமாதானமே பிரதானம்!