நில்... கவனி... செல்...! என்பது நம்மெல்லோருக்கும் பழக்கமானதொரு சொல். ஒருவர் ஒன்றை செய்யச் சொன்னால், சொல்வதற்கு நேரெதிராகச் செய்வது மனித இயல்பு.
வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளை, நில்லாதே... கவனியாதே... செல்லாதே...! என்ற கோணத்தில் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கலாம் என நம்புகிறேன். இதோ அவைகளின் தொகுப்பு:
நில்லாதே...!
1) உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே. (ஆதியாகமம் 19:17 )
2) பாவிகளுடைய வழியில் நில்லாதே. (சங்கீதம் 1:1 )
3) பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. (நீதிமொழிகள் 25:6 )
4) பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே. (பிரசங்கி 8:3 )
கவனியாதே...!
1) சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே. (பிரசங்கி 7:21)
2) தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் (I தீமோத்தேயு 1:3 )
செல்லாதே...!
1) நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. (ஆதியாகமம் 26:2 )
2) வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல் (மாற்கு 6:8 )
2) வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகாமல் (மாற்கு 6:8 )
3) ... வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். (லூக்கா 10:7 )