தமிழ்க் கிறிஸ்தவர்களின் தளத்தில் ஒரு நண்பர் இப்படியாக ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.
"5 நிமிட மட்டும் ஜெபம் செய்தல் சரியா தவறா ?"
நான் கீழ்க்கண்டவாறு எனது பதிலைப் பதித்தேன்.
"5 நிமிட மட்டும் ஜெபம் செய்தல் சரியா தவறா ?"
எனது பதில் சரி தான் என்பதே. காரணத்தைக் கூறுகிறேன், கவனமாக சிந்தியுங்கள்.
இடைவிடாமல் ஜெபிக்கணும்; சோர்ந்து போகாமல் ஜெபிக்கணும்; அதிகாலை, இருட்டோடே, என பல விளக்கங்களை பல காலமாக கேட்டுவரும் நமது நிலைமை எப்படி உள்ளது? நேர்மையாக நம்மை பரிசோதனை செய்து பார்ப்போம்... நம்மில் பலருக்கு சந்தேகம் தான் என்பது எனது கணிப்பு.
வேறு வேலைகள் இல்லையா? இன்று பல மணித்துளிகள் நான் ஊழிய காரியங்களில் தானே செலவு செய்திருக்கிறேன்; எனவெ இப்பொது ஜெபம் செய்ய விட்டாலும் தேவன் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார் என நமக்குள்ளே சுயதிருப்தி என சில பல காரணங்களினால் நம்மில் பலர் அதிகமான நேரம் ஜெபிப்பதில்லை.
வேதாகமத்தில் எங்குமே ஜெபத்தை குறித்த உன்னதமான உயர்ந்த பட்ச அளவீடுகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச வரையறை என்று எதுவுமே சொல்லப்படுவதில்லை. இதிலிருந்து விளங்கிக்கொள்வது என்னவென்றால் ஜெபத்தில் எப்போதுமே உயர்ந்த ஒரு நிலைமையை நாட வேண்டும்.
என்ன, பேதுரு சேம் சைடு கோல் அடிப்பது போல் உள்ளதே என சிலர் கூறுவது என் காதில் விழுகிறது. எனது கருத்தை கவனமாக கவனியுங்க.
"எப்படி வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் என்பதால், நம்மில் பலர் எப்பொழுதுமே எங்குமே எப்படியுமே ஜெபிப்பதில்லை" என்ற வாக்கியத்தை நீங்கள் எங்கேயாவது கேள்விப் ப்ட்டிருக்கக்கூடும்.
அதுபோலவே, இவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும் என்ற வறையறை எதுவும் இல்லமல், எவ்வளவு நேரமானாலும் ஜெபிக்கலாம் என்பதால் நம்மில் பலர் கொஞ்ச நேரம் கூட ஜெபிப்பதில்லை.
குடும்ப ஜெபம், 3 வேளையும் சாப்பிடுமுன்னர், வீட்டை விட்டு வெளியே கிளம்புமுன்னர், வீட்டிற்கு வந்த பின்னர், முக்கியமான நேரங்களில், சிக்கலான சூழ்நிலையில் என நாம் ஒவ்வொரு நாளும் ஜெபித்தாலே குறைந்த பட்சம் போதுமானது. Something is better than Nothing!
எனவே 5 நிமிடம் மட்டும் ஜெபிப்பது என்பதில் எந்த தவறும் இல்லை எனபது எனது வாதம். மற்றவர்களுக்கு வழிவிடுகிறேன்.
இது போன்று மற்ற கிறிஸ்தவ சகோதரர்களின் கருத்தினை அறிய இங்கு செல்லவும்: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4624#4624