Monday, March 17, 2014

வாதங்களில் மோசமான வாதம்

லெந்து கால சிந்தனை - 3:


ஒரு பொதுமருத்துவரை அணுகும் நோயாளிகளிடம் பரவலாக காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று கைகால் வலி. அதற்கு பல்வேறு தற்காலிக காரணங்கள் இருப்பினும் சில நிரந்தர காரணங்களாக ’வாத நோய்’ என்று சொல்லிவிடுகிறோம். வாதங்களில் 80க்கும் மேற்பட்ட வாதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.


பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வாக்குவாதம், ஆசீர்வாதம், உத்தரவாதம், மந்திரவாதம், விவாதம், உத்தரவாதம், திமிர்வாதம் போன்ற பல்வேறு வாதங்கள் மத்தியில், ஆசீர்வாதத்தில் ஆரம்பித்து பல்வேறு கருத்துக்களை ஒட்டி எழும் விவாதங்களையெல்லாம் தாண்டி  கிறிஸ்தவ வட்டாரத்தில் எழுந்து வரும் ”வாக்குவாதம் என்கிற கலாச்சாரம் உண்மையிலேயே ஒரு “திமிர் வாதம்!

.