Thursday, May 14, 2015

பரலோக விசா

விரும்பும் ஒரு நாட்டினை
விசிட்செய்ய ஆசைப்பட்டு
விதிமுறைகளுக்கு உட்பட்டு
விசாவேண்டி விண்ணப்பித்தோம்

விண்ணப்பிக்க அறியாமல் 

விழிபிதுங்கி அங்குமிங்கும்
புரோக்கருக்கு அலையாமல்
அனைத்துமே ஆன்லைன்தான்

கப்சிப்பென கச்சிதமாய்

விண்ணப்பத்தை பூர்த்திசெய்தோம்
அப்படியே ஆன்லைனில்
அக்கறையாய் அனுப்பிவைத்தோம்

இண்டர்வியூவும் வந்தது

எதிர்பார்ப்பும் கூடியது
நடைமுறையெல்லாம் நடந்தது
நிராகரிப்பில் முடிந்தது

காரணமென்ன கூறவில்லை

தெரியும்வரை நகரவில்லை
தெரிந்துகொண்டோம் காரணத்தை
அதிகாரியின் விளக்கத்தை

உள்ளதை உள்ளபடி

கூறினாலும் குற்றமாம்
கொடுப்பதும் மறுப்பதும்
அதிகாரியின் முடிவுதானாம்

மீண்டும் இதை விண்ணப்பிக்க

வாய்ப்பு மட்டுமே உள்ளது
கிடைக்குமென்ற உத்தரவாதம்
அவருமே தருவதாயில்லை

என்செய்வோம் இப்போது,

ஏனிந்த புறக்கணிப்பு?
மீள்பார்வை செய்துகொண்டோம்
இயல்புக்கு மீண்டுவந்தோம்

மறுமுறை எப்படி நடக்கவேண்டும்

அனைவரின் கருத்தையும் ஏற்கவேண்டும்
நம்மையும் ஆயத்தப்படுத்த வேண்டும்
வாய்ப்பினை வரும்போது பறிக்கவேண்டும்

ஆசிக்கும் பரலோக நாட்டிற்கு

விசாவழங்கும் அதிகாரி
வந்துசேரும் வேளையிலே
தந்திடுவாரோ நம்கையில்?

விரும்பும் நாட்டினை விசிட்செய்ய

வாய்க்காத வாய்ப்புக்கே வருத்தமே
நிலையாய் வாழும் நாட்டிற்கு
வாய்ப்பு நழுவினால் என்செய்வாய்?

மறுத்தால் எதும் வாய்ப்புண்டா

மறுமுறையாகிலும் முடிந்திடுமா
ஒருமுறை தானே வருவாரே
உறுதிசெய்வீர் தவறாதே!

- with Diana Pethuru & Steve Hudson on 12.05.2015 @ US Embassy in Kuwait.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment