Sunday, May 24, 2015

லஞ்சம் (பரிதானம்) பாவம் - ஏன்?

பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும் (நீதிமொழிகள் 17:8).


நாம் ஏன் லஞ்சம் வாங்கக் கூடாது?


1. தேவன் பரிதானம் வாங்குகிறவர் அல்ல

  •  உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல (உபாகமம் 10:17).

  • உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான் (II நாளாகமம் 19:7).


2. பரிதானம் வாங்காதிருப்பது தேவனுடைய கட்டளை


  •  பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். (யாத்திராகமம் 23:8)


3. பரிதானம் அநியாயம் செய்யும்


  • பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும் (உபாகமம் 16:19 ).

  • துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான் (நீதிமொழிகள் 17:23).

  • ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள் (I சாமுவேல் 8:3).

  • இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும் (பிரசங்கி 7:7).

  • பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா 5:23)

  • அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது (சங்கீதம் 26:10).



4. பரிதானம் வாங்கினால் ஆக்கினை வந்து சேரும்


  • மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும் (யோபு 15:34).


5. பரிதானம் தவிர்த்தால் ஆசீர்வாதம் வரும்


  • தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை (சங்கீதம் 15:5)

  • பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான் (நீதிமொழிகள் 15:27).


லஞ்சம் வாங்குவது பாவம் என்றால் லஞ்சம் கொடுப்பதும் பாவம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. 


.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment