Tuesday, October 16, 2007

முழு பெலத்தோடு அன்புகூறுதல்

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழுஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை." மாற்கு 12:31


முழு பெலத்தோடு அன்பு கூறுதல் என்றால் என்ன என்பது எனக்கு வெகு நாளாகவே யோசனையாக இருந்து கொண்டிருந்தது. 7 வருங்களுக்கு முன் எனது வாழ்க்கையில் எற்பட்ட அனுபவத்தின் மூலம் ஒரு நாள் தேவன் இதனை உணர்த்தினார். அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



கல்லூரி நாட்களில் நான் இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் என்ற இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தேன். நகர அளவில் செயல்படும் அனைத்துக் கல்லூரி நற்செய்தி மாணவர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததால், நான் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை மாநில அளவில் நடைபெற்ற REVIEW MEETல் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.



நான் அந்நாட்களில் பயிற்சி மருத்துவராக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிரசவ அறையில் ( labour Room ) 12 மணிநேர Duty ல் (இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை) இருந்தேன். ஒரு நிமிடம் கூட தூங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. அவ்வளவு பிஸியாக இருந்தது. என‌வே Duty முடித்த‌ பின்ன‌ர் ஆயத்த‌ம் செய்து விட்டு நேர‌டியாக‌ திருச்சியிலுள்ள‌ மாநில‌ அலுவ‌ல‌க‌த்திற்கு வந்து சேர்ந்தேன். அன்றைய‌ ப‌ணிக‌ளை மாலை வரை முடித்து விட்டு நேர‌டியாக‌ திரும்ப‌வும் பிர‌ச‌வ‌ அறையில் என‌து ப‌ணியினைத் தொடர்ந்தேன்.




ப‌ஸ்ஸில் ப‌ய‌ண‌ம் செய்த‌ நேரம் தான் நான் தூங்கின‌ நேர‌ம். ஞாயிற்றுக்கிழ‌மை அலுவ‌லின் ஆய‌த்த வேலைகளில் ஈடுபட்டு முந்தின‌ ப‌க‌லும் தூங்க‌வில்லை. என‌வே ஞாயிறு ந‌ள்ளிர‌விற்குப் பின் என்னால் தாக்குப்பிடிக்க‌ முடிய‌வில்லை.




அத்த‌னை நாளும் பொறுப்பாக‌ ப‌ணியினைச் செய்து அன்று ம‌ட்டும் வ‌ழ‌க்க‌த்திற்கு மாறாக‌ ப‌ணியினை ச‌ரிவ‌ர‌ செய்யாத‌தை‌ க‌வ‌னித்த‌ முதுநிலை பெண்ம‌ருத்துவ‌ர் என்னிட‌ம் கார‌ண‌த்தை வின‌வினார். நானும் உண்மையைச் சொல்லிவிட்டேன். அப்போது அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்: "ந‌ன்றாக‌ ரெஸ்ட் எடுத்து விட்டு திரும்ப‌வும் க‌டைமையைச் செய்வ‌த‌ற்குத் தானே 12 ம‌ணிநேர‌ இடைவேளை கொடுக்க‌ப்பட்டிருக்கிற‌து. நீ இப்ப‌டி செய்தால் எப்ப‌டி?". க‌டமைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ வேண்டும், அத‌ற்குப் பின் நேர‌ம் கிடைத்தால் தான் பொழுது போக்குக் காரிய‌ங்க‌ளுக்கெல்லாம் நேர‌ம் கொடுக்க‌ வேண்டும் என்று தொடர்ந்தது அவ‌ர்க‌ளின் வாத‌ம். அவ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர‌ல்லாத‌வரான‌ ப‌டியால் நான் அவ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ப்படுத்த‌வும் இல்லை; வாக்குவாத‌ம் செய்ய‌வும் இல்லை.




முழு பெலத்தோடு அன்பு கூறுதல் என்றால் என்ன என்று ச‌மீப‌த்தில் சிந்த‌னை செய்து கொண்டிருந்த‌ போது தேவன் இப்ப‌டியாக‌ உணர்த்தினார்:




திங்க‌ட்கிழ‌மை ஒரு அவ‌சிய‌மான‌ வேலை இருப்பின், ஞாயிற்றுக்கிழ‌மை இர‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌டுக்கைக்குச் செல்கிறோம்; அப்போது தான் ம‌ன‌து தெளிவாக‌ இருந்து காரிய‌த்தை ந‌ல்ல‌ முறையில் செய்யமுடியும் என‌ நினைத்து நாம் அப்ப‌டி ந‌ம்மை ஆய‌த்த‌ப்ப‌டுத்திக் கொள்கிறோம்....... ஆனால், அதே வித‌மாக‌ ஞாயிற்ருக்கிழ‌மை ஆராத‌னை, ஊழிய‌ காரிய‌ங்க‌ளுக்காக‌ ச‌னிக்கிழ‌மை இர‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌டுக்கைக்குச் செல்கிறோமா? இல்லையே... முடிக்க வேண்டிய‌ வேண்டிய‌ எல்லா வேலைக‌ளையும் முடித்து விட்டு‌ பின்ன‌ர‌வில் ப‌டுக்கைகுச் சென்று, ஞாயிற்றுக்கிழ‌மை தாம‌த‌மாக‌ எழும்பி ஒன்று ச‌பை ஆராத‌னைக்கு முழுக்கு போட்டு விடுகிறோம் அல்ல‌து தாமத‌மாக‌ ஆராத‌னைக்குச் சென்று அதிலும் தூங்கி வ‌ழிகிறோம். இப்போது சொல்லுங்க‌ள் எங்கே ந‌ம‌து PRIORITY (முன்தெரிவு) என்று?




இதுபோன்றே தான் ந‌ம‌து வேத‌ வாசிப்பு, ஜெப‌ம், விசுவாசிக‌ளோடு ஐக்கிய‌ம் இவைக‌ளையெல்லெம் க‌ளைத்துப் போன‌பின் க‌ட‌மைக்காக‌ செய்வோமா‌னால், ந‌ம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.



" நான் என் தேவனாகிய கர்த்தரிடத்தில் என் முழு இருதயத்தோடும், என் முழுஆத்துமாவோடும், என் முழு மனதோடும், என் முழுப் பெலத்தோடும் அன்பு கூறுகிறேனா?"




...

Monday, October 08, 2007

எவ்வளவு நேரம் ஜெபிப்பது?

தமிழ்க் கிறிஸ்தவர்களின் தளத்தில் ஒரு நண்பர் இப்படியாக ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.

"5 நிமிட மட்டும் ஜெபம் செய்தல் சரியா தவறா ?"

நான் கீழ்க்கண்டவாறு எனது பதிலைப் பதித்தேன்.


"5 நிமிட மட்டும் ஜெபம் செய்தல் சரியா தவறா ?"


எனது பதில் சரி தான் என்பதே. காரணத்தைக் கூறுகிறேன், கவனமாக சிந்தியுங்கள்.

இடைவிடாமல் ஜெபிக்கணும்; சோர்ந்து போகாமல் ஜெபிக்கணும்; அதிகாலை, இருட்டோடே, என பல விளக்கங்களை பல காலமாக கேட்டுவரும் நமது நிலைமை எப்படி உள்ளது? நேர்மையாக நம்மை பரிசோதனை செய்து பார்ப்போம்... ந‌ம்மில் ப‌ல‌ருக்கு சந்தேகம் தான் என்ப‌து என‌து க‌ணிப்பு.

வேறு வேலைகள் இல்லையா? இன்று ப‌ல‌ ம‌ணித்துளிக‌ள் நான் ஊழிய‌ காரிய‌ங்க‌ளில் தானே செல‌வு செய்திருக்கிறேன்; என‌வெ இப்பொது ஜெப‌ம் செய்ய‌ விட்டாலும் தேவ‌ன் த‌ப்பாக‌ எடுத்துக் கொள்ள‌மாட்டார் என ந‌ம‌க்குள்ளே சுய‌திருப்தி என‌ சில‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளினால் ந‌ம்மில் ப‌ல‌ர் அதிக‌மான‌ நேர‌ம் ஜெபிப்ப‌தில்லை.


வேதாக‌ம‌த்தில் எங்குமே ஜெப‌த்தை குறித்த உன்ன‌த‌மான‌ உய‌ர்ந்த ப‌ட்ச‌ அள‌வீடுக‌ள் தான் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. குறைந்த‌ப‌ட்ச‌ வ‌ரைய‌றை என்று எதுவுமே சொல்ல‌ப்படுவ‌தில்லை. இதிலிருந்து விள‌ங்கிக்கொள்வ‌து என்ன‌வென்றால் ஜெப‌த்தில் எப்போதுமே உய‌ர்ந்த‌ ஒரு நிலைமையை நாட வேண்டும்.


என்ன‌, பேதுரு சேம் சைடு கோல் அடிப்ப‌து போல் உள்ள‌தே என‌ சில‌ர் கூறுவ‌து என் காதில் விழுகிற‌து. என‌து க‌ருத்தை க‌வ‌ன‌மாக‌ க‌வ‌னியுங்க‌.


"எப்ப‌டி வேண்டுமானாலும் ஜெபிக்க‌லாம்; எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்க‌லாம்; எப்பொழுது வேண்டுமானாலும் ஜெபிக்க‌லாம் என்ப‌தால், ந‌ம்மில் ப‌ல‌ர் எப்பொழுதுமே எங்குமே எப்ப‌டியுமே ஜெபிப்ப‌தில்லை" என்ற‌ வாக்கிய‌த்தை நீங்க‌ள் எங்கேயாவ‌து கேள்விப் ப்ட்டிருக்க‌க்கூடும்.


அதுபோல‌வே, இவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும் என்ற வறையறை எதுவும் இல்லமல், எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் ஜெபிக்கலாம் என்பதால் நம்மில் பலர் கொஞ்ச நேரம் கூட ஜெபிப்பதில்லை.


குடும்ப ஜெபம், 3 வேளையும் சாப்பிடுமுன்ன‌ர், வீட்டை விட்டு வெளியே கிள‌ம்புமுன்ன‌ர், வீட்டிற்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முக்கியமான நேரங்களில், சிக்க‌லான‌ சூழ்நிலையில் என‌ நாம் ஒவ்வொரு நாளும் ஜெபித்தாலே குறைந்த பட்சம் போதுமான‌து. Something is better than Nothing!


என‌வே 5 நிமிட‌ம் ம‌ட்டும் ஜெபிப்ப‌து என்ப‌தில் எந்த‌ த‌வ‌றும் இல்லை என‌ப‌து எனது வாத‌ம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழிவிடுகிறேன்.


இது போன்று மற்ற கிறிஸ்தவ சகோதரர்களின் கருத்தினை அறிய இங்கு செல்லவும்: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4624#4624